Dear ,
இன்றைய வார்த்தை
அன்பு தேவனுடைய பிள்ளையே,
* நீங்கள் தேவனுடைய சொந்தமாயிருக்கும்படி அவரால் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.
* இந்தப் பிரபஞ்சம் முழுவதற்குமான திட்ட வரைபடத்தில் நீங்களும் பங்கு வகிக்கிறீர்கள்.
* பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்து உங்களுக்குள் வாழ்வதால், உங்களது ஆற்றல் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது.
* ஆம், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு என்று பவுல் சொல்வது போல் நீங்களும் சொல்ல முடியும்.
* உங்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் சிறந்திருக்கும்படி நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவனுடைய மகிமைக்காக நீங்கள் இயற்கைக்கப்பாற்பட்ட காரியங்களைச் செய்ய முடியும்.
* சாத்தானுடைய வஞ்சக வார்த்தைகளை நம்பி, உங்களை நீங்களே மட்டுப்படுத்திக்கொள்ளாதிருங்கள்.
* உங்கள் தரிசனத்தைக் குறுக்கி, ஒரு வட்டத்திற்குள்ளேயே முடங்கி விடாதீர்கள்.
* இவ்வுலகத்திற்குத் தேவனுடைய மகத்துவத்தைத் தெரிவிக்க நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.
* நீங்கள் அவருடைய உன்னதப் படைப்பு.
* தேவனுடைய தீர்க்கதரிசியாகிய நீங்கள், அவருடைய சத்தமாயிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இப்பொழுதும் எழும்புங்கள்.
ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, என்னை உம்முடையவனாயிருக்கும்படித் தெரிந்து கொண்டதற்கு நன்றி. நான் தைரியமாய் இருந்து உம்முடைய வார்த்தைகளை அறிவிக்க எனக்கு உதவும். ஆமென்.
.
******
0 comments