WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, தேவன் உங்களுக்கு ஆலோசனை சொல்லுவார். [15th Nov]

Tuesday, 15 December 2020


Dear ,


இன்றைய வார்த்தை:

உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32: 8.


* வாழ்க்கையின் தீர்மானங்களைப் பற்றிக் கவலைப்பட்டு, மனம் நொந்துபோனீர்களோ?


* உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களின் பல்வேறு ஆலோசனைகளால் மனக் குழப்பம் அடைந்தீர்களோ?


* நீங்கள் சந்தோஷம் கொள்ளாத பாதையின் வழியாய்க் கடந்து சென்றே ஆகவேண்டும் என்ற மன அழுத்தத்திற்குள் இருக்கிறீர்களோ?

* உறுதியாய் நில்லுங்கள்.

* திடன்கொள்ளுங்கள்.

* உங்களுக்குச் சகாயம் சமீபத்திலுள்ளது.


* பரிசுத்த ஆவியின்மூலம் இயேசுவின் ஆலோசனைக்குச் செவிகொடுக்கும்படி, உங்கள் காதுகளைக் கூர்மையாக்குங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள்.


* அவர் உங்களுக்கு வழி காட்டி, நீங்கள் நடக்கவேண்டிய வழியிலே உங்களை நடத்திச் செல்லுவார்.


* திடமனதோடு முன்னேறிச்செல்ல, தைரியத்தையும் தெளிவையும் அவர் உங்களுக்குத் தருவார்.


* இயேசுவின்மீது உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

* அவரது பாதத்தில் உட்கார்ந்து அவருக்குச் செவிகொடுங்கள்.

* அவரது ஆலோசனையைப் பின்பற்றும்போது நீங்கள் தவறிப்போவதில்லை.


ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, எனது எதிர்காலத்திற்கான ஆலோசனையை நாடி நான் உம்மிடத்தில் வருகிறேன். என்னை வழி நடத்தும் ஆண்டவரே, நான் கீழ்ப்படிதலோடு உம்மைப் பின்பற்றுவேன். ஆமென்.


image

******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#130 Dec 15, 2020

{{contact.first_name}}, GOD WILL COUNSEL YOU. [15th Dec]

Read issue →
#129 Dec 14, 2020

{{contact.first_name}}, உங்கள் சந்ததியார் வளர்ந்து பெருகுவார்கள். [14th Nov]

Read issue →