Sunday, 13 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச்செய்வேன். சங்கீதம் 91: 15
அன்பு தேவனுடைய பிள்ளையே,
* உங்கள் பிரச்சனைகளெல்லாவற்றையும் நீங்கள் பகிர்ந்துகொள்ள, அர்ப்பணிக்கப்பட்டதொரு உதவிக்கரம் உங்களுக்கு உள்ளது.
* ஆபத்துக்காலத்தில், நாம் அதிகமாய் நம்புகிறவர்களின் உதவி இல்லாமல் நாம் நிற்கதியாய் கைவிடப்பட்டிருக்கலாம்.
* ஆனால், நீங்கள் தேவனை எல்லாக் காலத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்பக் கற்றுக்கொள்ளும்போது, நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும் எல்லா நேரங்களிலும் அவர் உங்களுக்குப் பதிலளிப்பார்.
* அவர் உங்களைப் பாதுகாத்து வனாந்திரத்தில் வழி உண்டாக்குவார்.
* உங்கள் தேவைகளைச் சந்திக்கும்படி, தம்முடைய தூதர்களை உங்களை நோக்கி அனுப்புவார்.
* அவர் உங்களைத் தனியே விடுவதேயில்லை.
அவரை இப்போது கூப்பிடுங்கள்.
* எந்தவொரு சந்தேகமுமின்றி அவரைக் கூப்பிடுங்கள்.
* எந்தவொரு தயக்கமுமின்றி அவரைக் கூப்பிடுங்கள்.
* அவர் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை.
* அவர் உங்கள் கூப்பிடுதலைப் புறக்கணிப்பதில்லை.
உங்கள் கூப்பிடுதலுக்கு அவர் பதிலளிப்பார்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எப்போதும் நீர் என் அனுகூலமான துணையாயிருப்பதற்கு, உமக்கு நன்றி. எந்தவொரு தயக்கமும், சந்தேகமும் இன்றி உம்மை சார்ந்துக்கொள்ள உதவும்.. ஆமென்.
******
0 comments