Wednesday, 9 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். சங்கீதம் 27:10
தனிமையாகவும், கைவிடப்பட்டதுபோலும், நண்பர்களால் புறக்கணிக்கப்பட்டதுபோலும் உணருகிறீர்களோ?
* பொதுவாக ஒரு தனிப்பட்ட நபரது வாழ்க்கையில், தகப்பனும் தாயும், அவரது சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் அவருக்குத் துணையாயிருப்பர்.
* இருப்பினும், பெற்றோர்களே, கைவிட்டுவிடக்கூடிய அளவு, மனித உறவுகள் மிகவும் பெலவீனமானதே.
ஆனால், தேவனோ நம்மைத் திக்கற்றவர்களாய் விடுவதில்லை.
* எல்லா நேரங்களிலும் நீங்கள் சார்ந்துகொள்ளக்கூடியவர், இயேசு ஒருவர் மாத்திரமே.
ஆகையால்,
* எந்தவொரு மனிதனின் மீதும் உங்களது முழு நம்பிக்கையையும் வைக்காதிருங்கள்.
* அதற்குப் பதிலாய் உங்கள் நம்பிக்கையை இயேசுவின்மீது வையுங்கள்.
* தேவனுடைய அன்பிற்கு உங்கள் இருதயத்தை முழுமையாய் ஒப்புக்கொடுங்கள்.
* அவர், உங்களைத் தனிமையாகவோ அல்லது திக்கற்றவறாகவோ விடுவதேயில்லை.
*அவர் உங்களைத் தமது இருதயத்திற்கு அருகில் வைத்துக்கொண்டு, உங்களது வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நீங்கள் செழித்தோங்கச் செய்வார். திடன்கொள்ளுங்கள்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே எனக்கு எல்லாம். எந்தவொரு சந்தேகமுமின்றி உம்மை முழுமையாய் நம்ப எனக்கு உதவும். ஆமென்.
******
0 comments