Dear ,
இன்றைய வார்த்தை
* பாவத்தினால் அல்லது வியாதியினால் நீங்கள் கட்டப்பட்டிருக்கிறீர்களா?
* இரகசியமான பாவ அடிமைத்தனங்களிலிருந்து விடுபட, தனிமையில் தேவனை நோக்கி அழுதுகொண்டிருக்கிறீர்களா?
இயேசுவிடம் திரும்புங்கள்.
அவர் வழியைத் திறப்பவர்; விலங்கை உடைப்பவர்.
* இயேசுவுக்குக் கீழ்ப்படிய எடுக்கும் தீர்மானத்துடன் கூட, முழுமையாய் அர்ப்பணிப்பதும், தவறான காரியங்களை சீர்ப்படுத்துவதுமே உங்கள் விடுதலைக்கான முக்கியப் படிகளாகும்.
* இயேசுவோடுள்ள நெருங்கிய ஐக்கியத்தில் அதிகமதிகமாய் வளர்வது உங்கள் விசுவாசத்தில் உங்களைத் தக்க வைக்கும்.
* அவரது கரங்களில் உங்களை நீங்கள் அர்ப்பணிக்கும்போது, அவர் உங்களைப் பொல்லாதவர்களின் கரங்களிலிருந்து தப்புவிப்பார்.
* அவர், உங்கள் கழுத்தின்மேலிருக்கிற நுகத்தடியையும் இருப்பு விலங்குகளையும் உடைத்துப்போட்டு உங்களை விடுவிப்பார்.
* இயேசு உங்களை நேசிக்கிறார். எல்லாக் கட்டுகளிலிருந்தும் உங்களை விடுவிக்கவே இறங்கி வந்திருக்கிறார்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது சங்கிலிகளிலிருந்தும் எனது கட்டுகளிலிருந்தும் என்னை விடுவியும். உமது இரத்தத்தினால் என்னைக் கழுவி, உமக்குள் இருகின்ற விடுதலையை அனுபவிக்க எனக்கு உதவும். ஆமென்.
******
0 comments