Monday, 7 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.
எசேக்கியேல் 16 : 60
ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு, குறைந்த பட்சம் இரண்டு தனிநபர்கள் அல்லது இரண்டு குழுக்கள் தேவை.
இது, அவர்களது பரஸ்பரப் புரிந்துகொள்ளுதலையும், வலியுறுத்தப்படும் நோக்கத்தையும், அதனைக் காத்துக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் பரஸ்பரச் செயல்பாடுகளையும் குறிக்கிறது.
* இங்கு தேவன் உங்களுடனே கூட ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார்.
* உங்கள் சிருஷ்டிகரோடு ஒரு உடன்படிக்கைக்குள் வருவது என்பது, ஆச்சரியமும் கனத்திற்கு உரியதுமானதல்லவா?
* இது, அவர் எவ்வளவாய் உங்களை மதித்து, உங்கள் வாழ்க்கையைப் பெரிதாய்க் கருதுகிறார் என்பதைக் குறிக்கிறது.
* மற்றவர் உங்களை நடத்தும் விதங்களினால், நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவன்(ள்) என்று எண்ணுகிறீர்களோ?
* உங்களது உடன் ஊழியர்களால் பரியாசம் செய்யப்படுகிறீர்களோ?
* சூழ்நிலைகளாலும் ஜனங்களாலும் மனமடிந்து போகாதிருங்கள்.
* நீங்கள் பாத்திரவான்கள் என்றும், தேவனுடைய உடன்படிக்கைக்கு விலையேறப் பெற்ற பங்காளிகளாவதற்கு, முக்கியமாய்க் கருதப்படுகிறவர்களென்றும் உங்களை நீங்களே நினைப்பூட்டிக்கொள்ளுங்கள்.
* உங்களது தாழ்வு மனப்பான்மையினின்றும் உணர்வுகளினின்றும் வெளியே வாருங்கள்.
* உங்களைக்குறித்துத் திடமனதாயிருங்கள்.
நீங்கள் தேவனுக்கு விலையேறப்பெற்றவர்கள்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய உடன்படிக்கைக்குப் பங்காளியாய் இருக்கும்படிக்கு என்னைப் பாத்திரமாய் எண்ணுவதற்காக நன்றி. தயவு கூர்ந்து, உம்முடைய எதிர்பார்ப்புகிணங்க இந்த உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ள எனக்கு உதவும். ஆமென்.
******
0 comments