WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, தேவன் உங்களை உயர்த்தி வைப்பார்.. [5th Dec]

Dear ,


Saturday, 5 December 2020


தேவன் உங்களை உயர்த்தி வைப்பார்.


இன்றைய வார்த்தை:

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்.

உபாகமம் 26 : 19


* இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நீங்கள் ஒரு தனி நபராய் தேவ தயவையும் கிருபையையும் சுமக்கிறீர்கள்.


* பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குள் வசிக்கும் இயேசு கிறிஸ்து உங்களை விசேஷித்தவர்களாய் மாற்றி, இயற்கைக்கப்பாற்பட்ட காரியங்களுக்காகத் தகுதிப்படுத்துகிறார்.


​* நீங்கள் வெற்றியும் கனமும் அடைய முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள்.


* நீங்கள் தற்போது கடந்து செல்லும் சூழ்நிலைகளினிமித்தம் உங்களை மற்றவரோடு ஓப்பிட்டுப் பார்க்காதிருங்கள்.


* உங்கள் கடந்த கால வாழ்வைக் குறித்து முறுமுறுக்காதிருங்கள்.


* மற்றவரிடத்திலும் சுற்றி நடக்கும் காரியங்களிலும் குறை கண்டறிவதைத் தவிர்த்திடுங்கள்.

* உங்களது எதிர்காலத்திற்கான தேவ திட்டங்களையும் ஆசிர்வாதங்களையும் நீங்கள் நம்பினால், நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றவேண்டும்.


* மாபெரும் சாதனைகள் செய்வதற்கென்று தீவிரமாய்க் களமிறங்க, மேலான காரியங்களையும் மேலான நோக்கங்களையும் நீங்கள் கண்ணோக்க வேண்டும்.

​

* சரியான பாதையில் முன்னேறுவதற்கான, வழிகளையும் தீர்வுகளையும் ஆய்ந்தறியுங்கள்.

​

* ஆவியினாலே நடத்தப்பட்டு மாபெரும் எல்லைகளை அடைய உறுதியாயிருங்கள்.


​ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, எனது வெற்றிக்காகவும் எதிர்கால ஆசீர்வாதங்களுக்காகவும், உமது திட்டங்களுக்கு ஒத்துழைத்துப் பணிசெய்ய அர்ப்பணிக்கிறேன். என்னைத் தகுதிப்படுத்தி, பெலப்படுத்தும். ஆமென்.


image





******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#111 Dec 5, 2020

{{contact.first_name}}, GOD WILL SET YOU HIGHER. [5th Dec]

Read issue →
#110 Dec 4, 2020

{{contact.first_name}}, தேவன் தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவார். [4th Dec]

Read issue →