Sunday, 20 December 2020
Dear ,
இன்றைய வார்த்தை:
கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார் எரேமியா 20: 11
அன்பு தேவனுடைய பிள்ளையே,
* நீங்கள் தனியே இல்லை.
* தேவன் எப்போதும் உங்களோடு இருக்கிறார்.
* ஒருவேளை நீங்கள் உபத்திரவத்தின் காலகட்டத்தில் சென்றுகொண்டிருக்கலாம்
ஆனால், இன்று திடன்கொள்ளுங்கள்.
* தேவன் உங்களுக்கு நீதி செய்து உங்களுக்காகப் பழி வாங்குவார்.
* உங்களைத் துன்புறுத்துவோரையே நோக்கிக்கொண்டிராதிருங்கள்.
* உங்கள் கண்களை இயேசுவின்மேல் பதியவையுங்கள்.
* உங்களைத் துன்புறுத்துவோரும் உங்களது துன்பங்களும் ஒன்றுமில்லாமற்போகும்.
* அப்படிப்பட்ட சமயங்களினின்று புடமிடப்பட்ட பொன்னைப்போல நீங்கள் வெளியே வருவீர்கள்.
* நீங்கள் உத்வேகத்தின் ஆதாரமாகவும், பலருக்கு முன்மாதிரியாயும் இருப்பீர்கள்.
* உங்கள் வாழ்க்கை தேவ அன்பிற்குச் சாட்சியாயிருக்கும். நீங்கள் அநேகரை அவரது அன்பு மற்றும் இரட்சிப்பிற்குள் கொண்டுவருவீர்கள்.
ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, உம்மேலுள்ள விசுவாசத்தை இழந்துபோகாமல், இந்த சோதனையின் காலங்களைக் கடந்து செல்ல எனக்குக் கிருபை தாரும். எனது ஜீவியம் உமக்குமுன்பாகப் பரிசுத்தமும் பிரியமுமாய் இருக்கட்டும். ஆமென்.
******
0 comments