WORD FOR ALL: Daily Snippets Based On The Holy Bible by Anesh D Sundar

All issues

{{contact.first_name}}, தேவன் உங்கள் காயங்களை ஆற்றுவார். [19th Nov]

Saturday, 19 December 2020


Dear ,


இன்றைய வார்த்தை:

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன். எரேமியா 30: 17


* சுற்றியுள்ள சூழ்நிலைகள் அல்லது மனிதர்களினிமித்தம் காயப்பட்டீர்களோ?


* உங்களுக்கெதிராய்ப் பேசப்பட்ட, கடினமான அல்லது காயப்படுத்தும் வார்த்தைகளால் உடைந்துபோனீர்களோ?


* உங்களது கடந்தகாலக் காயங்களை இன்னும் நினைத்துக்கொண்டு, எந்தவொரு ஆறுதலும் இல்லாமல் இருக்கிறீர்களோ?

ஆம். வார்த்தைகள் வல்லமையுள்ளது, வேண்டுமென்றே ஜனங்கள் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, அவைகள் மிகுந்த பாதிப்பை விளைவிக்கக்கூடும்.


* ஆனால் இயேசு கிறிஸ்துவில் ஒரு சுகம் உண்டு.

* காயப்பட்ட அந்தத் தருணங்களையும் அந்த வார்த்தைகளையும் தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுங்கள்.


* அவர் உங்கள் காயங்களைக் குணமாக்குவார்.

அதே நேரத்தில்,

* விரைவாய் உங்கள் வார்த்தைகளையும் பரிசோதித்துப் பாருங்கள்.

* சொல்லப்பட்ட வார்த்தைகளைத் திருப்பி எடுக்க முடியாது.


* நீங்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்?


* நீங்கள் வெகுவாய் மற்றவர்களைக் காயப்படுத்துபவரா?


* குறைகண்டுபிடித்து மற்றவர்களை மட்டுப்படுத்தும் கடினமான விமர்சகரா?


* நாம் விதைப்பதையே அறுப்போம்.

ஆகையால்,

* நீங்கள், மற்றவர்களைக் காயப்படுத்தும்படி பேசும் பழக்கத்தைத் திருத்திக்கொண்டு மனம் திரும்புங்கள்.


* உங்களது வார்த்தைகள் மற்றவர்களைக் கட்டி எழுப்பி உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கட்டும்.

ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, எனது வார்த்தைகள் மற்றும் வழிகளின்மூலம் மற்றோரைக் காயப்படுத்தினதை மன்னியும். மற்றோரது காயங்களை ஆற்றுவதுபோல் எனது காயங்களையும் ஆற்றும். ஆமென்.


image


******



Share
Get the next issue in your inbox
Free, and you can unsubscribe any time.

0 comments

More issues

All 141 →
#137 Dec 18, 2020

{{contact.first_name}}, எல்லாப்பக்கத்திலும் தேவன் உங்களைப் பாதுகாப்பார். [18th Nov]

Read issue →
#136 Dec 17, 2020

{{contact.first_name}}, சுகமாகுங்கள். இயேசு உங்கள் நோய்களைச் சுமந்துகொண்டார். [17th Nov]

Read issue →