Dear ,
Thursday, 3 December 2020
பயத்தின் ஆவியை மேற்கொள்ளுங்கள்:
இன்றைய வார்த்தை:
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
2 தீமோத்தேயு 1 : 7
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.
ஆனால், தேவ பிள்ளைகளின் வாழ்க்கையிலுள்ள பயத்தின் ஆவி, அவர்கள் விசுவாச வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கிறது. ஆகையால், இது தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்வதற்கு மிகப் பெரிய தடையாயிருக்கிறது.
* இந்தப் பயத்தின் ஆவியோடு போராடிக்கொண்டிருக்கிறீர்களா?
* இந்தப் போராட்டத்திற்கு, நீங்கள் ஒரு சாக்குபோக்கும் சொல்ல முடியாது. ஏனென்றால், தேவன் தமது அன்பின் ஆவியினாலும் தெளிவின் ஆவியினாலும் ஏற்கனவே ஒரு தீர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
* பூரண அன்பு, பயத்தைப் புறம்பே தள்ளும். ஒருவேளை, இந்தப் பயத்தின் ஆவி இன்னும் உங்களைத் தாக்கிக்கொண்டெ இருக்கிறதென்றால், கிறிஸ்துவின் பூரண அன்பை, நீங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை என்று வேதம் கூறுகிறது.
* சத்தியம் அறிவையூட்டி, பயத்தை வேரறுக்க விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறது.
* தேவனுடைய வார்த்தையினாலும் அதன் புரிந்துகொள்ளுதலாலும் உங்களை நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள்.
* சத்துருவின் மேல் தேவன் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். ஆகையால் நீங்கள் இந்தப் பயத்தின் ஆவியைக் கடிந்துகொண்டு இயேசுவின் நாமத்தில் அதனை விரட்ட வேண்டும்.
* இயேசு கிறிஸ்துவில் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். வேறு மார்க்கம் கிடையாது.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னை இன்னும் அன்பின் ஆவியினாலும் தெளிவின் புத்தியினாலும் நிரப்பி பயத்தின் ஆவியை மேற்கொள்ளச் செய்யும். ஆமென்.
******
0 comments