Dear ,
இன்றைய வார்த்தை :
தம்மிடத்தில் நம்பிக்கை வைக்கிறவர்கள் மேல் தேவன் எப்பொதும் பிரியமாயிருக்கிரார்.
விசுவாசமில்லாமல் தேவனை பிரியபடுத்தமுடியாது என்று வேதம் கூறுகிறது.
சோதனைப்பட்டியல்:
நாம் ஆண்டவரை நம்பினால்;
* முழுமையாக அவரையே சார்ந்திருப்போம்.
* நம் விசுவாசத்திற்கு செயல்வடிவம் கொடுத்து அவரையே அண்டிக்கொள்வோம்.
* அவரது பாதுகாப்பின் கீழ் அமைதியாக இருப்போம்.
* நம்மை அச்சுறுத்தும் பிரச்சனைகளை கண்டு பயப்படவோ, கூக்குரலிடவோ மாட்டோம்.
* நம் வாழ்வில் அவரது வேளைக்காக காத்திருப்போம்.
* ஆண்டவருக்குள் ஓய்ந்திருந்து, அவரது சமாதானத்தை அனுபவிப்போம்.
நீங்கள் ஆண்டவரை நம்புகிறீர்களா?
எவ்வளவாய் அவரில் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்?
* நீங்கள் ஆண்டவரை நம்பினால்; அவர் உங்களுக்கு கேடகமாயிருப்பார்.
* அவர் உங்களை பாதுகாப்பார். நீங்கள் ஏமாற்றம் அடைவதில்லை.
* உங்கள் பிரச்சனைகள் கடந்துபோகும் மேகங்களைப்போன்று மாறிவிடும்.
* சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த நாட்களை அனுபவிப்பீர்கள்.
* பதட்டப்படாதிருங்கள்; அவரது பலத்த கரங்களுக்குள் அடங்கியிருங்கள்.
ஜெபம்: அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, உம்மை எல்லா சூழ்நிலைகளிலும் நம்பி உம்முடைய பாதுகாப்பின் கீழ் அமைதியாக இருக்க உதவிச்செய்யும். எல்லா தீமைகளுக்கும் விலக்கிப்பாதுகாத்தருளும். ஆமென்.
0 comments